போலீஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் கைது

புத்ராஜெயா, ஏப்ரல்.24-

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு கோடியே 50 லட்சம் ரிங்கிட் கோரியது தொடர்பில் நிறுவன இயக்குநர், தலைமை நிதி அதிகாரி, இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட அறுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

கணினி, தொடர்பு முறையின் பராமரிப்புப் பணிகளுக்கான குத்தகை சம்பந்தப்பட்ட மிகப் பெரிய மோசடியில் இந்த அறுவரும் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்ப்படுகிறது.

30 க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும், இன்று புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு எஸ்பிஆர்எம் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளது.

WATCH OUR LATEST NEWS