புத்ராஜெயா, ஏப்ரல்.24
ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியில் நிகழும் தவறுகள் சகித்துக் கொள்ளப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அது அரசாங்க ஏஜென்சியாக இருந்தாலும் தயவு தாட்சணை காட்டப்படாது. நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவே அமையும் என்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தினார்.
ஆகக் கடைசியாக கல்வி அமைச்சு இத்ததகையத் தவற்றைச் செய்து இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்காது என்பதையும் அவர் விளக்கினார்.