பாஃட்லீனா சீடேக் கைது செய்யப்படுவாரா?

கோலாலம்பூர், ஏப்ரல்.24-

மலேசியக் கல்வி அமைச்சு இன்று ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியைத் தவறாகச் சித்தரித்ததற்காக அதன் அமைச்சர் பாஃட்லீனா சீடேக் கைது செய்யப்படுவாரா? என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸையிட் இப்ராஹிம் வினவியுள்ளார்.

அதே வேளையில் சின் சியூ டெய்லி சீனப் பத்திரிக்கையின் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதைப் போல பாஃட்லீனா சீடேக் கைது செய்யப்பட மாட்டார் என்று ஒரு கல்விமானான தஜுடின் முகமட் ரஸ்டி தெரிவித்துள்ளார்.

ஒரே மாதிரியான தவறு நடந்துள்ள இந்த இரு விவகாரங்களையும் அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகிறது என்பதைத் தாம் பொறுத்திருந்து பார்க்கப் போவதாக முன்னாள் கோத்தா பாரு எம்.பி.யான ஸையிட் இப்ராஹிம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS