இளைஞரைக் தடுத்து வைத்துத் தாக்கியதாக எட்டு பேர் மீது குற்றச்சாட்டு

மாசாய், ஏப்ரல்.25-

கடந்த வாரம் ஜோகூர், மாசாய், பிளேந்தோங் பாருவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் ஆடவர் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்து, கண்மூடித்தனமாகத் தாக்கி, குற்றுயிரும் குலையுயிருமாகப் படுகாயம் விளைவித்ததாக ஒரு பெண் உட்பட எட்டு பேர் ஜோகூர்பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் எட்டு பேரும் மாஜிஸ்திரேட் அதிஃபா அஸிமா வாஹாப் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

19 க்கும் 25 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த எட்டு பேரும் 22 வயது முகமட் பாஃரிஸ் ஷாமி என்பவரை வீட்டில் அடைத்து கடுமையாகத் தாக்கி, கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

எட்டு பேரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தீர்ப்பு வரும் 3 ஆம் தேதி அளிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் அதிஃபா அஸிமா வாஹாப் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS