ஆயர் குரோ, ஏப்ரல்.25-
தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தியதுடன் வெட்டிக் கொல்லப் போவதாக சமுராய் கத்தி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் பாதுகாவலர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட பாதுகாவலர், இன்று மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, நான்கு நாள் தடுத்து வைப்பதற்கான அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளனர்.
புதிய நண்பர்கள் அறிமுகச் செயலியைப் பயன்படுத்தி, புதிய நட்பு வட்டாரங்களை உருவாக்கிக் கொண்டதாகக் கூறப்படும் தனது 19 வயது மனைவியைக் கடுமையாகத் தாக்கியதுடன், சாமுராய் கத்தியால் வெட்டிக் கொல்லப் போவதாக அந்த பாதுகாவலர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மலாக்கா, குரோபோங்கில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய அந்த பாதுகாவலரை வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை மாஜிஸ்திரேட் என். சிவசங்கரி வழங்கினார்.