மூவார், ஏப்ரல்.25-
ஓன் லைன் மூலமாக முதலீட்டில் ஈடுபட்டு வந்த பணி ஓய்வு பெற்ற முன்னாள் பெண் ஆசிரியர் ஒருவர், நப்பாசையில் தனது முதலீட்டை இரு மடங்காக அதிகரித்த போது, ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 199 வெள்ளிளை இழந்தார்.
ஜோகூர், மூவாரைச் சேர்ந்த 66 வயதுடைய அந்த முன்னாள் ஆசிரியை இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். ஏற்கனவே கிடைத்த சொற்பத் தொகை ஆதாயத்தை விட, கூடுதல் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது முதலீட்டை இரண்டு மடங்காகப் பெருக்கிய போது முழு முதலீட்டுத் தொகையையும் இழந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
சமூக வலைத்தளத்தில் வெளிவந்த ஒரு விளம்பரத்தைக் கண்டு அந்த மாது முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி ரயிஸ் முக்லிஸ் குறிப்பிட்டார்.