டிஜிட்டல், ஏஐ செயற்கை நுண்ணறிவுத் துறைகள் – பள்ளி அளவில் ஆளுமைக் கொள்ள வேண்டும்

ஈப்போ, ஏப்ரல்.25-

டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவான AI துறைகளில் முதலில் பள்ளி அளவில் மாணவர்கள் ஆளுமைக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

தற்போது நாடு துரித வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முதலீடுகள் பெருகிக் கொண்டு இருக்கிறது. மென்பொருள் உற்பத்தி மையமாக மலேசியா விளங்கிட வேண்டுமானால் மாணவர்கள் முதலில் பள்ளி அளவில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தில் ஆளுமைக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

வெற்றி பெற்ற மாணவர்களை உருவாக்கிட, புதிய அறிவுத் திறன் சார்ந்த டிஜிட்டில் மற்றும் AI தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொள்வது மிக அவசிமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் சிறந்த ஆளுமையைக் கொள்வதற்கு மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற்ற மாணவர்களாக உருவாகிட முடியும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இதன் காரணமாகவே தற்போது பல்கலைக்கழகங்களில் AI தொழில்நுட்பத்திற்கு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தமது நாடாளுமன்றத் தொகுதியான பேரா, தம்புனில் இன்று சனிக்கிழமை மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS