ஷா ஆலாம், ஏப்ரல்.26-
ஷா ஆலாமில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட எல்லைத் தகராற்றில் பிச்சைக்காரர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக நம்பப்படும் மற்றொரு பிச்சைக்காரரான 28 வயது நபர், 7 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஷா ஆலாம், செக்ஷன் 18 இல் ஒரு வங்கியின் முன்புறம் நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 48 வயது பிச்சைக்காரர் ஒருவர் நெஞ்சுப் பகுதியில் ஆழமான கத்திக் காயங்களுடன் சம்பவ இடத்திலே மாண்டார்.
பிடிபட்ட நபர், மாற்றுத் திறனாளிக்கான ஓகேயூ அடையாள அட்டையைக் கொண்டுள்ளார். அவரை விசாரிக்க ஏதுவாக வரும் மே முதல் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.