ஏழு பிரதானச் சாலைகள் மூடப்படுகின்றன

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

இன்றிரவு 2025 ஆம் ஆண்டுக்கான மலேசியக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்று, கோலாலம்பூர் புக்கிட் ஜாலீலில் நடைபெறுகிறது. இதனையொட்டி 7 பிரதானச் சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் துறை அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் அந்த இறுதியாட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு 7 சாலைகள் மூடப்படுவதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் ஸாம்ஸுரி முகமட் ஈசா தெரிவித்தார்.

சுகோம் சமிக்ஞை விளக்குப் பகுதியில் கெசாஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, சுகோம் சமிக்ஞை விளக்குப் பகுதியிலிருந்து ஜாலான் மேரா சாகாரை நோக்கிச் செல்லும் சாலை, கெசாஸ் நெடுஞ்சாலையிலிருந்து ஜாலான் பாராட் வரை, ஜாலான் பாராட்/ ஜாலான் ராடின் உட்பட புக்கிட் ஜாலில் பகுதியில் 7 முதன்மைச் சாலைகள் மூடப்படவிருப்பதாக முகமட் ஸாம்ஸுரி குறிப்பிட்டார்.

மலேசியக் கிண்ணக் கால்பாந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டதில் ஜோகூர் ஜேடிடி அணியினர் ஸ்ரீ பகாங்கைச் சந்திக்கவிருக்கின்றனர்.

WATCH OUR LATEST NEWS