கோலாலம்பூர், ஏப்ரல்.26-
நாட்டில் குண்டர் கும்பலை ஊக்குவிப்பதற்கு சமூக வலைத்தளங்களில் குண்டர் கும்பல் செயலி, பயன்பாட்டில் இருப்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள், பள்ளிப் படிப்பை முடித்த இளைஞர்கள் ஆகியோரை குண்டர் கும்பலில் கவர்வதற்கு அந்தச் செயலி, பயன்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை துணை இயக்குநர் டத்தோ பாஃடில் மர்சுஸ் தெரிவித்தார்.
சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் குண்டர் கும்பல் செயலியின் செயல்பாட்டில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.