கூச்சிங், ஏப்ரல்.26-
காரில் சென்றுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சரவாக், கூச்சிங், ஜாலான் ஸ்தீபஃன் யோங் சாலையில் நிகழ்ந்தது.
உள்ளூரைச் சேர்ந்த 34 வயதுடைய நபர், தலையிலேயே சுடப்பட்டார். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து இரு ஆடவர்கள் போலீசுக்குத் தகவல் அளித்ததாக படாவான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இர்வான் ஹாபிஃஸ் தெரிவித்தார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.