சிகாமாட், ஏப்ரல்.26-
ஜோகூர், சிகாமாட், புக்கிட் ஹம்பார் தேசியத் தொடக்கப்பள்ளிக்கு அருகில் எதிர்த்திசையில் வாகனத்தைச் செலுத்தி, மற்ற வாகனமோட்டிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் மாது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரோடுவா பேஸா காரில் மற்றவர்களின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் அந்த மாது, எதிர்த்திசையில் காரைச் செலுத்தியது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாதைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி அடையாளம் காணப்பட்டதாக சிகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஸம்ரி மாரின்சா தெரிவித்தார்.
சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டதில் 40 வயது மதிக்கத்தக்க அந்த மாது போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளதாக அஹ்மாட் ஸம்ரி குறிப்பிட்டார்.