ரெம்பாவ், ஏப்ரல்.26-
சுரங்கப்பாதை மேற்பார்வையாளர் ஒருவர், மோட்டார் சைக்கிளுடன், லோரியின் பின்புறத்தில் மோதியதில் பலத்த காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றார்.
இச்சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 242.9 ஆவது கிலோமீட்டரில் ரெம்பாவ் அருகில் நிகழ்ந்தது.
சிலாங்கூர் சேர்ந்த 31 வயது அப்துல் ஹய்யு அப்துல் காடீர் என்ற அந்த மேற்பார்வையாளர், மோட்டார் சைக்கிளுடன் லோரியின் அடியில் சிக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ரெம்பாவ் மாவட்ட இடைக்காலப் போலீஸ் தலைவர் அஸ்மி அலி தெரிவித்தார்.