மூவார், ஏப்ரல். 26-
ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மலாய்காரர்கள் திரண்டு வந்து வாக்களிப்பார்கள் என்றால் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெறும் சாத்தியம் இருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மலாய்க்கார வாக்காளர்களின் வாக்களிப்பு விழுக்காட்டைப் பொறுத்தே பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றியை உறுதி செய்ய இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள இந்த இடைத் தேர்தலில் அம்னோ சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளராக டாக்டர் முகமட் யுஸ்ரி பாக்கீர் போட்டியிடும் வேளையில் பாஸ் சார்பில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக அப்துல் முஹைமின் மாலேக்கும், பிஎஸ்எம் கட்சி சார்பில் வழக்கறிஞர் பவானி கேஎஸ்ஸும் போட்டியிடுகின்றனர்.