பாகான் டத்தோ, ஏப்ரல்.26-
பேரா, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் கடந்த இரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கேந்திரங்களின் செயல்பாடு மனநிறைவு அளிக்கும் வகையில் உள்ளது என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இவ்விரு கூட்டணிகளும் கூட்டாகச் செயல்பட்டது சிறந்த பங்களிப்பாகும் என்று பொருள் கொள்ளப்படும். வெற்றியைத் தேடி தந்த கடந்த இடைத் தேர்தல்களான கிளந்தான் நெங்கிரி சட்டமன்றம், ஜோகூர் மாஹ்கோத்தா சட்டமன்றம் ஆகியவற்றில் கையாளப்பட்ட கூட்டு ஒத்துழைப்பைப் போல ஆயர் கூனிங்கிலும் காண முடிந்தது என்று துணைப்பிரதமரான அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.
எனினும் ஆயர் கூனிங்கில் பாரிசான் நேஷனலின் வெற்றியானது, வாக்களிக்க வருகின்றவர்களின் விழுக்காட்டைச் சார்ந்து இருக்கிறது என்று பாரிசான் நேஷனல் தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.