மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து வசூலில் சாதனைப் படைத்தது.
நடிப்பைத் தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக கலக்கி வந்தார் விஜய் சேதுபதி. தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து, தெலுங்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத்துடன் கூட்டணி சேர்கிறார். பான் இந்தியா அளவில் உருவாக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க நடிகை தபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் நடிகர் குறித்து ஓர் அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, இப்படத்தில் ‘புஷ்பா’, ‘மாமன்னன்’ போன்ற படங்களில் வில்லனாகக் கலக்கிய பகத் பாசில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.