கோலாலம்பூர், ஏப்ரல்,27-
புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நேற்று நடந்த மலேசிய கிண்ண இறுதிப் போட்டியில் கலவரத்தில் ஈடுபட்ட சில கால்பந்து இரசிகர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹான்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களால், குடும்பத்துடன் மைதானத்திற்கு வரும் பிற ரசிகர்கள் அச்சமடைய வாய்ப்புள்ளது. இதனால் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பான சூழல் இல்லாத நிலை ஏற்படும். எனவே, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இது கால்பந்து விளையாட்டுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். குடும்பத்தினர் அனைவரும் விளையாட்டை அமைதியாக இரசிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு பொழுதுபோக்காகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.