கோலாலம்பூர், ஏப்ரல்,27-
மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி சுவிட்சர்லாந்தின் ஸூரிக்கில் நடைபெற்ற கிராஸ்ஹொப்பர் 2025 கிண்ணப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், இப்போட்டியின் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்த சிவசங்கரி, இரண்டாவது இடத்தில் இருந்த பெல்ஜியத்தின் தின் ஜிலேஸை 13க்கு 11, 7க்கு 11, 11க்கு 8, 15க்கு 13 என்ற செட் கணக்கில் 53 நிமிடங்களில் வீழ்த்தினார்.
அடுத்து நடைபெறும் இறுதிப் போட்டியில், உலகத் தர வரிசையில் 11வது இடத்தில் இருக்கும் சிவசங்கரி, உலகின் முதல் நிலை வீராங்கனையான எகிப்தின் நூரின் கோஹாரை எதிர்கொள்கிறார்.