ஜேடிதி மற்றொரு புதிய சாதனை

கோலாலம்பூர், ஏப்ரல்.27-

மலேசியக் காற்பந்து களத்தில் ஜோகூர் டாருல் தாஸிம் (ஜேடிதி) மற்றொரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று சீசன்களில் நான்கு கோப்பைகளை வென்று ‘hatrik quadruple’ பட்டத்தைப் பெற்றுள்ளது. நேற்றிரவு புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் ஶ்ரீ பஹாங் எப்ஃசியை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசியக் கிண்ணத்தையும் கைப்பற்றியதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. முன்னதாக, ஜேடிதி இந்த சீசனில் சும்பாங்சீ கிண்ணம, எப்ஃஏ கிண்ணக், சூப்பர் லீக் பட்டங்களையும் வென்றிருந்தது.

புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் திரண்டிருந்த 55 ஆயிரத்து 552 உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் ஜேடிதி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த ‘‘hatrik quadruple’ சாதனை இந்த நூற்றாண்டில் எந்த அணியாலும் முறியடிக்க முடியாதது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இறுதி ஆட்டத்திற்கு நுழைந்த மகிழ்ச்சியையும் ஜேடிதிக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் , ஜோகூர் மாநில அரசு நாளை ஏப்ரல் 28 ஆம் தேதி மாநிலப் பொது விடுமுறையாக அறிவித்திருந்தது.

WATCH OUR LATEST NEWS