வாரணாசி, ஏப்ரல்.27-
வாரணாசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கனடாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். வாரணாசி விமான நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று நேற்றிரவு புறப்பட்டது. அப்போது அந்த விமானத்தில் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த பயணி, வெடிகுண்டை ஒருவர் வைத்திருப்பதாகக் கூற அங்கே பரபரப்பு எழுந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் தீவிர சோதனை நடத்த, வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பின்னர், அந்த விமான வாரணாசி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தில் கனடாவைச் சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
விமான நிலைய நடவடிக்கைகளை தாமதப்படுத்த அவர் தவறான தகவலை அளித்தது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கனடா நாட்டு தூதரகத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.