தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற நபரைத் தடுத்த பெண் காயம்

கூலிம், ஏப்ரல்.27-

கூலிமில் உள்ள தாமான் கோத்தா கெனாரியில் நேற்று மாலை கழுத்தில் அணிந்திருந்தத் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற ஆடவரைத் தடுக்க முயன்ற பெண் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. மாலை 5 மணியளவில் வீட்டில் தாயாருடனும் நண்பருடன் இருந்த 39 வயது பெண்ணை அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டினர். அப்பெண் அணிந்திருந்த நகையைப் பறிக்க முயன்ற போது, அதனைத் தடுக்க முயன்றதாக கூலிம் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸுல்கிப்ளி அஸிஸான் தெரிவித்தார்.

அதன் பின்னர் அந்த நபர், பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்து, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்ததால் அவர் கீழே விழுந்தார். இந்தச் சம்பவத்தில் எழுத்தராகப் பணிபுரியும் பெண்ணுக்குக் காயம் ஏற்பட்டது. எனினும், அவருக்கு எந்தப் பொருட்சேதமும் ஏற்படவில்லை. மற்றொரு நபர் Yamaha Y15 மோட்டார் சைக்கிளுடன் வீட்டின் வெளியே காத்திருந்தார். மோட்டார் சைக்கிளின் பதிவு எண் தெரியவில்லை. வீட்டின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. காயமடைந்த பெண் கூலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் 394வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS