பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.27-
இந்த ஆண்டு நடைபெற உள்ள சபா மாநிலத் தேர்தலில் அதிகப்படியாக 10 இடங்களில் போட்டியிட மூடா கட்சி திட்டமிட்டுள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் என்று மூடா கட்சியின் சபா மாநில இடைக்காலத் தலைவர் பாஃயேஸ்ரா ரிஸால்மான் தெரிவித்தார். தங்களின் திறனையும் தற்போதையச் சூழ்நிலையையும் பொறுத்து, 10 இடங்களுக்கு மிகாமல் போட்டியிட இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு முன் கிராமப்புறங்களில் போட்டியிட்டோம். இந்த முறை நகர்ப்புறப் பகுதிகளில் கவனம் செலுத்துவோம் என்று அவர் கூறினார். சபாவில் அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 5,000 ஆகும். சிறிய கட்சி என்பதால்தான் பலம் குறைவாக உள்ளது. எனவே, இணையம் வழி பரப்புரைகள் மூலம் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டியுள்ளது என்றார்.