நிதி நெருக்கடியை மாநில அரசு தீர்க்க முடியாது

ஈப்போ, ஏப்ரல்.27-

பேரா எப்ஃசி கால்பந்து அணியின் நிதி நெருக்கடியை மாநில அரசு தீர்க்க முடியாது என்று பேரா மாநில முதல்வர் சராணி முகமட் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பருவத்திற்கும் அதிக நிதி தேவைப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் கால்பந்து விளையாட்டு மிகவும் விலை உயர்ந்தது. பேரா மட்டுமல்ல, மற்ற மாநில அரசுகளும் இதை சமாளிக்க முடியவில்லை. பேரா எப்ஃசி விளையாட்டாளர்களின் நிலுவைச் சம்பள பிரச்சினையையும் மாநில அரசால் தீர்க்க முடியாது. அது அணியை ஸ்பான்சர் செய்தவர்களின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

இருப்பினும், பள்ளி மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் புதிய திறமைகளைக் கண்டறியும் பணியை பேரா கால்பந்து சங்கம் மூலம் கால்பந்து மேம்பாடு தொடர்ந்து நடைபெறும். கால்பந்து மேம்பாட்டுக்கான செலவு மிகவும் குறைவானது. மாநில அரசு ஒரு மில்லியன் ரிங்கிட்டுக்கு குறைவாகவே நிதி உதவி செய்கிறது. நிதி பிரச்சினைகள் காரணமாக The Bos Gaurus அணியான Perak FC அடுத்த சூப்பர் லீக் போட்டியில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று அணியின் தலைவர் அஸிம் ஸாபிடி நேற்று உறுதிப்படுத்தினார். கடந்த மூன்று ஆண்டுகளில் அணிக்கு சுமார் 40 மில்லியன் ரிங்கிட் செலவு செய்தும் அணியை மேம்படுத்த முடிந்தவரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS