கோலாலம்பூர், ஏப்ரல்.28-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தனது எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதாகக் கூறி செய்து கொண்ட வழக்கு விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்துள்ள அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்துறை தலைவரின் விண்ணப்பத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் 7 கேள்விகளை முன்வைத்து, சட்டத்துறை தலைவர் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருந்தார். மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்று இந்த விண்ணப்பத்தை விசாரணை செய்த மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹஷிம் இந்த மேல்முறையீட்டில் பொது நல அம்சங்கள் இருப்பதால் சட்டத்துறைத் தலைவர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் அனுமதி வழங்குவதாகத் தெரிவித்தார்.