தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் சுதா கொங்கரா. இவர் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களைத் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.
இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்க, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்து சுதா கொங்கரா படம் குறித்து தற்போது அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, ‘வேட்டை நாய்’ என்ற நாவலைத் திரைப்படமாக உருவாக்க சுதா கொங்கரா முடிவு செய்துள்ளாராம். அதில் கதாநாயகனாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது சிம்பு அடுத்தடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் இந்த படங்களை முடித்த பின் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.