நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது கார் பந்தயத்துறையில் ஈடுபட்டு உலக அளவில் பல பந்தயங்களில் வெற்றி பெற்று வருகிறார்.
அவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருதை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதை ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் அஜித்துக்கு பத்மபூஷன் விருதை வழங்கி இருக்கிறார்.