ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.28-
அமைச்சுக்கள் மற்றும் கூட்டரசு அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே பாதுகாப்பாக மற்றும் ஆக்கப்பூர்வமாகத் தரவுப் பகிர்வுக்கான சட்டப்பூர்வ மற்றும் கட்டமைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான தரவுப் பகிர்வுச் சட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக நடப்புக்கு வந்துள்ளதாக இலக்கவில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தது மூலம் மலேசியா இன்று வரலாற்றுப்பூர்மான தருணத்தைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் வர்ணித்தார்.
இந்தச் சட்டம் மத்திய அரசு நிறுவனங்களால் தரவு விண்ணப்ப செயல்முறையை நிறுவுகிறது. விண்ணப்பங்கள் செயல்படுத்தும் முறையும் இதில் அடங்கும் என்று அமைச்சர் விளக்கினார்.
கோரப்பட்ட தரவைப் பகிர முடியுமா? முடியாதா என்பதைத் தீர்மானிக்க இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் தேசிய தரவுப் பகிர்வுக்கு, ஒவ்வொரு விண்ணப்பமும் மிக கவனமாக மதிப்பீடு செய்யப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.