பாரிசான் நேஷனலுக்கு பல இன மக்கள் ஆதரவு பெருகுகிறது

குவா மூசாங், ஏப்ரல்.28-

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேரா, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கு, பல இன மக்களின் ஆதரவு பெருகியுள்ளது என்பதைத் தேர்தல் முடிவு புலப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

பாரிசான் நேஷனல் பெரியளவில் ஆதரவை பெறவில்லை என்று சில ஆய்வுகள் சுட்டிக் காட்டிய போதிலும், தங்களைப் பொறுத்தவரை, இம்முறை ஆயர் கூனிங் தேர்தல் மகத்தான வெற்றி மட்டுமல்ல, மக்களின் மனங்களை வென்றுள்ளது என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

ஒரே ஒரு மையத்தில் மட்டுமே பாரிசான் நேஷனல் வெறும் 88 வாக்குகளைப் பெற்றது. மற்ற மையங்களில், பெரும்பாலான் வாக்குகளை அது குவித்துள்ளது என்று அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

முன்முனைப் போட்டி நிலவிய ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாகீர் 5,006 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவருக்கு 11,065 வாக்குகள் கிடைத்தன.

WATCH OUR LATEST NEWS