ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.28-
பினாங்கு மாநிலத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு நீடித்த குடிநீர் விநியோகத் தடை இன்று திங்கட்கிழமை 100 விழுக்காடு வழக்க நிலைக்கு திரும்பியதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சியினால் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியிருப்பதாக அவர் வர்ணித்தார்.
பினாங்கு மாநிலத்தில் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையினால், மாநிலத்தின் நீர் விநியோகத் தரத்தை உயர்த்துவதற்கு இந்த மூன்று நாட்களில் 23 திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாக சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.