ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.29-
வயது குறைந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பசார் ராயா கிடங்கு பாதுகாவலர் ஒருவர் ஜார்ஜ்டவுன், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
20 வயதுடைய அந்த இளைஞர், நீதிபதி ஜுராய்டா அப்பாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு மொழிப் பெயர்ப்பாளரின் உதவியுடன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம், பினாங்கு, தஞ்சோங் தோகோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் 16 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த இளைஞருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.