புத்ராஜெயா, ஏப்ரல்.29-
பகாங், ரவூப்பில் அரசாங்க நிலங்களில் அத்துமீறி நுழைந்து டுரியான் மரங்கள் நடவு செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் தனிநபர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் அரசாங்க அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியல் தயாராகி வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.