கோலாலம்பூர், ஏப்ரல்.29-
கோலாலம்பூர், ஸ்தாபாக், ஜாலான் ஆயர் ஜெர்னியில் உள்ள ஸ்தாபாக் உயர்நிலை பள்ளியின் மாணவர் தங்கும் விடுதி நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தது.
இந்த தீச்சம்பவம் தொடர்பாக இரவு 8.30 மணிக்கு தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக கோலாலம்பூர், தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
மாணவர் தங்கும் விடுதி முற்றாக அழிந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் எதுவும் நிகழவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த உயர்நிலைப்பள்ளியில் 96 மாணவர்கள் தங்கி படித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.