ஜெகுய்தா கொன்ஸாலேஸ் கோமேஸ் மறைவிற்கு அமைச்சர் அந்தோணி லோக் இரங்கல்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.29-

நேற்று திங்கட்கிழமை காலமான ஜெகுய்தா கொன்ஸாலேஸ் கோமேஸ் மறைவிற்கு அவரின் குடும்பத்தினருக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.

ஜெகுய்தா கொன்ஸாலேஸ் கோமேஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி மர்மான முறையில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சிற்குச் சொந்தமான MH 370 விமானப் பணியாளர்களின் மேற்பார்வையாளரான பாட்ரிக் கோமேஸின் மனைவி ஆவார்.

MH 370 துயரச் சம்பவத்திற்கு பின்னர் மீளா துயருக்கு ஆளான ஜெகுய்தா கொன்ஸாலேஸ் கோமேஸ், அந்த பேரிடருக்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியன்று தனது கணவனின் சிறப்புகள் குறித்து பேட்டி அளித்து வந்தவர் ஆவார்.

புற்று நோயினால் அவதியுற்று வந்த ஜெகுய்தா கொன்ஸாலேஸ் கோமேஸ், கடந்த திங்கட்கிழமை தனது இறுதி மூச்சை விட்டார்.

போக்குவரத்து அமைச்சு சார்பில் மறைந்த ஜெகுய்தா கொன்ஸாலேஸ் கோமேஸ் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS