ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.29-
மலேசியாவை ஒரு மென்பொருள் தயாரிப்பு மையமாக உருவாக்கப்படும் அதன் பங்களிப்பு ஏற்ப எதிர்காலத்தில் தொழில்நுட்பத்துறையில் பினாங்கு மாநிலம் பிராந்திய அளவிலான ஒரு தொழில்நுட்பப் பூங்கா மையமாக மேம்படுத்தப்படுவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
பினாங்கு நீண்ட காலமாகவே மென்பொருள் தயாரிப்பு மையமாக அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விரிவான முறையில் தொழில்நுட்பச் சூழல் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் தொழில்நுட்பப் பூங்கா மையமாக மாறும் ஆற்றலை பினாாங்கு மாநிலம் கொண்டுள்ளது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
முதலீட்டாளர்களின் மலேசிய வருகையின் போது, தொழில்நுட்பத்திற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் பினாங்கில் இருப்பதைப் பார்க்கும் பட்சத்தில் நிச்சயம் அவர்களை வெகுவாகக் கவரும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
இன்று பினாங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான மலேசிய இலக்கவியல் சேவைத் தினத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனைத் தெரிவித்தார்.