சுபாங் ஜெயா, ஏப்ரல்.29-
அண்மையில் சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிவிபத்து சம்பவத்தில் தங்கள் வீடுகளை இழந்த 150 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கான வீட்டு வாடகைப் பணம், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கலாச்சாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் ஷா தெரிவித்தார்.
வீட்டு வாடகையைப் பெறுவதற்கு முன் வந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, நேற்று வரையில் அதிகரித்துள்ளது என்ற போதிலும் அவர்கள் வழங்கக்கூடிய ஒவ்வொரு விண்ணப்பமும், விரிவான விசாரணைக்குப் பின்னரே இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை அரசாங்கம் சீரமைத்துக் கொடுக்கும் வரையில் அடுத்த மூன்று மாத காலத்தில் அவர்கள் வாடகை வீடுகளில் இருப்பதற்கு ஏதுவாக வீட்டு வாடகைப் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.