சண்டாகான், ஏப்ரல்.29-
சபா, சண்டாகானில் வெட்டுக் கத்தியை ஏந்திக் கொண்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய 27 வயது நபர், பின்னர் போலீசாரால் வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் சண்டாகான், பண்டார் இண்டாவில் நிகழ்ந்தது.
வெட்டுக் கத்தியை சுழற்றிக் கொண்டு, பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய அந்த நபர் குறித்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து போலீசார் விரைந்து செயல்பட்டதாக சண்டாகான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஆஸ்மோம் பாஜா தெரிவித்தார்.