கோலாலம்பூர், ஏப்ரல்.29-
கனடாவின் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இருக்கும் அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தத் தேர்தல், கனடாவிற்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. அத்துடன் சுதந்திரம், மீட்சித் தன்மை மற்றும் கொள்கை ரீதியான தலைமைத்துவத்திற்கான நாட்டின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் கனடா வங்கியின் முன்னாள் தலைவரும் பிரதமருமான மார்க் கார்னியின் ஆளும் லிபரல் கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
மார்க் கார்னி தலைமையில் கனடா, ஆக்கப்பூர்வமான அனைத்துலக அளவிலான ஈடுபாட்டிற்கு வலுவான மற்றும் நிலையான குரலாக இருக்கும் என்று தாம் நம்புவதாக தமது வாழ்த்துச் செய்தியில் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.