60 ஆவது இடத்திற்கு உயர்ந்தது மலாயாப் பல்கலைக்கழகம்

கோலாலம்பூர், ஏப்ரல்.29-

நாட்டின் பழமை வாய்ந்த பல்கலைக்கழமான மலாயாப் பல்கலைக்கழகம் , 2025 ஆண்டில் உலகில் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்லைக்கழகங்களில் மலாயாப் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பல்லைக்கழங்ங்களின் தர வரிசையில் 60 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக மேன்மை தங்கிய பேரா சுல்தானும் மலாயாப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சுல்தான் நஸ்ரின் அறிவித்தார்.

இதற்கு முந்திய ஆண்டுகளில் மலாயாப் பல்கலைக்கழகம், உலகில் முன்னணி பல்கலைக்கழங்களின் தர வரிசையில் இது போன்று உயரிய இடத்தைப் பெற்றது இல்லை. அது 60 ஆவது இடத்தைப் பிடித்தது இதுவே முதல் முறையாகும் என்று சுல்தான் பெருமிதம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS