ஜாலோர் கெமிலாங் விவகாரம், விசாரணைக்கு வழிவிடுவீர்

புத்ராஜெயா, ஏப்ரல்.29-

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவு குறித்து கல்வி அமைச்சு மேற்கொண்ட பகுப்பாய்வு அறிக்கையில், ஜாலோர் கெமிலாங் தேசியக் கொடியில் நிகழ்ந்த தவறு தொடர்பில் விசாரணைக்கு வழிவிடுமாறு அனைத்து தரப்பினரையும் கல்வி அமைச்சர் பாஃட்லீனா சீடேக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜாலோர் கெமிலாங் கொடியில் நிகழ்ந்த தவற்றைப் போல, கல்வி அமைச்சில் மீண்டும் இத்தகைய தவறு நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்கு விசாரணைக்கு முதலில் தீர்வு காண வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

விசாரணைக்கு வழிவிடுவதில் அப்படி என்ன கெட்டு விடப் போகிறது என்று பாஃட்லீனா சீடேக் கேள்வி எழுப்பினார்.

கல்வி அமைச்சில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய தவற்றுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று , அதன் உயர் அதிகாரி பதவி விலக வேண்டும் என்று முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் பதில் அளிக்கையில் பாஃட்லீனா சீடேக் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS