பகான் டாலாம், ஏப்ரல்.29-
பினாங்கு, பகான் டாலாம், உஜுங் பத்துவில் இன்று காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று வீடுகள் அழிந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்று பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று காலையில் பினாங்கு கோம்தார் கட்டத்தில் மாநில மக்கள் நலன் சார்ந்த சந்திப்புக் கூட்டம் ஒன்று, முதலமைச்சர் சோவ் கோன் யோவிற்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திக் கலந்து கொள்வதற்காகத் தாம் சென்று கொண்டிருந்த போது, தனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் இத்தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் முடிவை ரத்து செய்து விட்டு பாதிக்கப்பட்டப் பகுதிக்கு விரைந்த போது மூன்று வீடுகள் தீயில் அழிந்ததை அறிய முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
இத்தீ விபத்தில் சிறுமி ஒருவர் தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் பிளாட் அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி வீடொன்றில் தற்காலிமாகத் தங்குவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாகக் குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு இதர உதவிகள் வழங்க சமூக நல இலாகா மூலம் தமது சேவை மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.