36 கோடி ரிங்கிட் கோரியது தொடர்பில் டத்தோஸ்ரீ உட்பட நால்வர் கைது

புத்ராஜெயா, ஏப்ரல்.30-

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி 36 கோடி ரிங்கிட் கோரியது தொடர்பில் டத்தோஸ்ரீ அந்தஸ்தில் உள்ள ஒரு நபர் உட்பட நால்வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

50 க்கும் 70 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் நேற்று மாலை 4 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட பின்னர் அந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர்கள், கடந்த 2016 க்கும் 2017 க்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் இந்த மோசடி வேலையைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் அமல்படுத்தப்பட்ட 130 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள ஒரு நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் 36 கோடி ரிங்கிட்டை கபளிகரம் புரிந்துள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஒரு டத்தோஸ்ரீ உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு இருப்பதை எஸ்பிஆர்எம் விசாரணைப் பிரிவின் முதிர்நிலை இயக்குநர் டத்தோ ஸைனுல் டாருஸ் உறுதிச் செய்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS