கோலாலம்பூர், ஏப்ரல்.30-
எஸ்எஸ்டி எனப்படும் விற்பனைச் சேவை வரியை மேலும் விரிவுபடுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நிதி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.
நாளை மே முதல் தேதி இந்த விரிவாக்கம் இடம் பெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்படுவதாக ஏற்கனவே அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக கருத்துரைத்த லிம் ஹுய் யிங், இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் அது பற்றி அறிவிக்கப்படும் என்றார்.
எஸ்எஸ்டி வரிக்கான புதிய முன்னேற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட தொழில் துறையினருடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மலேசிய உற்பத்தியாளர்கள் சம்மேளனம் எப்ஃஎப்ஃஎம் உட்பட பல்வேறு தரப்புகளின் கோரிக்கையால் அதன் அமலாக்கம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லிம் ஹுய் யிங் விளக்கினார்.