புத்ராஜெயா, ஏப்ரல்.30-
கோழி முட்டைக்கு அரசாங்கம் வழங்கி வரும் உதவித் தொகைக்கானச் சலுகை, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி முடிவடைகிறது.
அதற்கு முன்னதாக, கோழி முட்டைக்கான விலைக் கட்டுப்பாடு, நாளை முடிவடைகிறது என்பதுடன் முட்டைக்கு தற்போது அரசாங்கம் வழங்கி வரும் தலா ஒரு முட்டைக்கு 10 காசு வீதம் உதவித் தொகை, 5 காசாகக் குறைக்கப்படுகிறது.
இது நாளை மே முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.