குற்றச்சாட்டை மறுத்தார் கெடா மந்திரி பெசார்

அலோர் ஸ்டார், ஏப்ரல்.30-

கெடா மாநில அரசுக்கு தலைமையேற்றுள்ள தம்முடைய நிர்வாகத்தின் மீது கொண்டுள்ள அதிருப்தியினால் அந்த மாநிலத்தை விட்டு ஒவ்வொரு முதலீட்டாளரும் வெளியேறிக் கொண்டு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மந்திரி பெசார் சனூசி முகமட் நோர் மறுத்துள்ளார்.

முதலீட்டார்கள் வெளியேறுவதற்கு கெடா மாநில அரசோ அல்லது அரசியலோ தொடர்பு இல்லை. மாறாக, அந்தந்த முதலீட்டாளர்கள் அல்லது நிர்வாகங்கள் கொண்டுள்ள வர்த்தகக் கொள்கையை பொறுத்து இம்முடிவை எடுத்துள்ளனர் என்று சனூசி நோர் குறிப்பிட்டார்.

நாட்டில் மிகப் பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலையான அலோர் ஸ்டாரில் செயல்பட்டு வரும் கொண்டினெந்தல், இவ்வாண்டு இறுதியில் தனது தொழிற்சாலையை மூடவிருப்பதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதன் மூலம் 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயத்தை நோக்கியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து கேட்ட போது மந்திரி பெசார் சனூசி மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS