துன் அஹ்மாட் பூஃசியின் சேவையை பினாங்கு என்றென்றும் நினைவு கூரும்

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.30-

பினாங்கு ஆளுநர் துன் அஹ்மாட் பூஃசி அப்துல் ரஸாக்கிற்கு இன்று பிரியாவிடை அளிக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே முதல் தேதியிலிருந்து பினாங்கு மாநிலத்தின் எட்டாவது ஆளுநராகப் பதவிப் பொறுப்பை ஏற்ற, துன் அஹ்மாட் பூஃசியின் பதவிய்ஹ் தவணைக் காலம் இன்று ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் நிறைவுப் பெற்றது.

இதனையொட்டி பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தலைமையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் மாநில தலைமைத்துவ கேந்திரம் முழுவதுமே ஆளுநர் துன் அஹ்மாட் பூஃசிக்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

துன் அஹ்மாட் பூஃசியின் சேவைக்காலம் 4 ஆண்டுகள் என்ற போதிலும் பினாங்கு அரசையும், மக்களையும் வழிநடத்திய சிறந்த சேவைமிக்க ஒரு தலைவர் என்று முதலமைச்சர் புகழாரம் சூட்டினார்.

துன் அஹ்மாட் பூஃசி, ஆளுநர் பொறுப்பிலிருந்து விடைப் பெற்றாலும் அவரின் சேவையை பினாங்கு அரசும், மக்களும் என்றென்றும் நினைவு கூர்வர் என்று சோவ் கோன் யோவ் தமது உரையில் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS