கோலாலம்பூர், ஏப்ரல்.30-
போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் அனுப்பியதைப் போல் அனுப்பப்பட்டுள்ள ஒரு மின் அஞ்சல் உள்ளடக்கத்தை யார் அனுப்பியது குறித்து போலீஸ் துறை தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
அந்த மின் அஞ்சலை அனுப்பிய நபர், அதற்குப் பொறுப்பேற்க வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் தனது மறுபதில் அனுப்பி எதிர்வினையாற்றியுள்ளதாக குற்றப்புலானாய்வுத்துறை இடைக்கால இயக்குநர் டத்தோ முகமட் ஹஸ்புல்லா அலி தெரிவித்துள்ளார்.