கோலாலம்பூர், ஏப்ரல்.30-
பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி பதவி விலகி விட்டதாக ஆருடங்கள் வலுத்து வரும் வேளையில் அவர் விடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊடகங்களின் பார்வை தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது உள்ளது.
இன்று ஏப்ரல் 30 ஆம் தேதி ரபிஸி ரம்லி, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது தொடர்பில் தற்போது பல்வேறு ஆருடங்கள் வலுத்து வருகின்றன.
பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தோல்விக் கண்டது தொடர்பில் கட்சியின் துணைத் தலைவரான ரபிஸி ரம்லி வெளியிட்ட ஒரு செய்தி, இதற்குக் காரணமாக இருக்கலாமா என்றும் கூறப்பட்டு வருகிறது.