குரூண், மே.01-
கெடா குரூணில் உலு கிந்தா வடப்பகுதி பொதுபணி படையினர் ( Briged Utara PGA) நடத்திய அதிரடி சோதனையில் எவ்விதமான ஆதாரங்கள் இன்றி வெ 226,120.00 மதிப்புள்ள 56.53 டன் வெள்ளை அரிசிகளைக் கடத்த முயன்ற இரண்டு உள்நாட்டவர்களைப் பொதுப்பணி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக வடப்பகுதி பொதுப்பணியின் தலைமை அதிகாரி எஸ்ஏசி ஷாரும் பின் ஆஷிம் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2.00 மணி அளவில் குரூண் சாலையில் வடப்பகுதி பொதுப்பணி குழுவின் அதிகாரிகள் ஒரு டிரேலர் ஒன்றினை தடுத்து அந்த டிரேலரைச் சோதனைச் செய்ததில் அந்த டிரேலரில் இருந்த அரிசி மூட்டைகளை ஏற்றி வருவதற்கான எவ்விதமான ஆதாரங்களை அதிகாரிகளிடம் வழங்கத் தவறியத்தை அதிகாரிகள் கண்டுள்ளனர் . உடனடியாக அந்த டிரேலரியில் இருந்த 23 வயதுடைய ஓட்டுனரை உடன் இருந்த 20 வயதுடைய இன்னொரு ஆடவரையும் அதிகாரிகள் தடுத்ததாக எஸ் எஸ்ஏசி ஷாரும் பின் ஹாஷிம் கூறினார்.

மேலும் , அவ்விரு ஆடவர்களைச் சோதனைச் செய்ததில் அவர்கள் கிளந்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் லாரி ஓட்டுனராக வேலை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் அவர்களின் சிறுநீர் சோதனையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று தெரியவந்தன.
இக்குற்றச்செயல் செக்ஷன் 7(2) குற்றவியல் சட்டம் 522 அக்தா காவால்செலியா பாடி டான் பெராஸ் 1994 கீழ் அவ்விரு ஆடவர்களைத் தடுத்து விசாரணை நடத்தப்படும் என்றார் எஸ்ஏசி ஷாரும் பின் ஹாஷிம். இவர்களின் குற்றம் நிருபிக்கப்பட்டால் வெ 15 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்படும் அப்படியில்லாவிட்டில் அவ்விரு தண்டனைகளும் வழங்கப்படும் என்றார்.

ஆகவே , இச்சோதனை மூலம் அரிசிகளை ஏற்றி வந்த வெ 400,000 லட்சம் மதிப்புள்ள டிரேலருடன் அரிசி மூட்டைகள் என மொத்தம் வெ 626,120.00 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது . அத்துடன் டிரேலர் ஓட்டுனருக்கு மூன்று விதமான சம்மன்களும் வழங்கப்பட்டன . இப்பறிமுதல்கள் மற்றும் கைதான இரு ஆடவர்கள் கெடா மாநில காவால்செலியா பாடி டான் பெராஸ் இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டத்தாக வடப்பகுதி பொதுப்பணி குழுவின் தலைமை அதிகாரி எஸ்ஏசி ஷாரும் பின் ஹாஷிம் குறிப்பிட்டார்.