பத்து பஹாட், மே.02-
நாளை சனிக்கிழமை மண மேடை காணவிந்த பெண், விபத்தில் உயிரிழந்தார். நேற்று காலை 8.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 93.3 ஆவது கிலோ மீட்டரில் பத்து பஹாட் அருகில் நிகழ்ந்த இவ்விபத்தில் 28 வயதுடைய சித்தி நூர் ஷமீரா ஷம்சோல் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.
தனது வருங்கால கணவர் 30 வயதுடைய முகமட் அய்மான் அப்துல் ரஷிட்டுடன் காரில் பயணித்துக் கொண்டு இருந்த போது , கார் சாலையை விட்டு விலகி சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
கடுமையான காயங்களுக்கு ஆளான மணமேடை காணவிருந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.