கோத்தா திங்கி, மே.02-
இரண்டு மோட்டார் சைக்கிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இவ்விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு 8.16 மணியளவில் ஜோகூர், செனாய்- டெசாரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் 28 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோப் ஒத்மான் தெரிவித்தார்.
உயிரிழந்த அந்த மோட்டார் சைக்கிளோட்டி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல, முயற்சித்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.